நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சிய விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அரச தரப்பு சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவின் வழிகாட்டலின் கீழ் சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதிகளில் ஐந்து காணித் துண்டுகளைக் கொள்வனவு செய்வதற்காக 73 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையைச் செலவிட்டதன் மூலம், யோஷித ராஜபக்ஷ பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
