இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் உத்தியோகபூர்வமாக கையெழுத்திடுவதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் டிசம்பர் மாதம் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருதரப்புக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இந்த ஒப்பந்தம் முக்கியமான நடவடிக்கையாக அமையும் என ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா தெரிவித்துள்ளார்.
கனடாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் 17ஆம் திகதி பிரஸ்ஸல்ஸில் ஆரம்பமாகவுள்ள ஐரோப்பிய தலைவர்களின் மாநாட்டை அண்மித்த காலப்பகுதியில் பிரதமர் மோடியின் இந்த விஜயம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
