Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடத்தல் வழக்கில் 36 வயதுடையவருக்கு 7 வருட கடூழிய சிறை!

நவம்பர் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் கடத்திச் சென்று சிறை வைத்த குற்றச்சாட்டில், 36 வயதுடைய நபர் ஒருவருக்கு ஏழு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நடராசா சதீஷ் ராசா அல்லது காதர் என அழைக்கப்படும் குறித்த நபருக்கு, 25,000 ரூபா அபராதமும் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று (30) வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் திகதி, தன்னாமுனையைச் சேர்ந்த சதீஸ்குமார் என்பவரைக் கடத்திச் சென்று சவுக்கடி பகுதியில் சிறை வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. பின்னர் 2022ஆம் ஆண்டு இந்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அரச தரப்பு சட்டத்தரணிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் ரி. தர்சிகா ஆகியோர் வழக்கில் ஆஜராகி வாதாடினர். கடந்த 15ஆம் திகதி குறித்த நபர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது.

ஆள் ஒருவரைப் பலவந்தமாகக் கடத்திச் சென்று சிறை வைத்த குற்றத்திற்காக தண்டனைச் சட்டக்கோவையின் 32 மற்றும் 356ஆம் பிரிவுகளின் கீழ் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கடல் அலை உயர்வு தொடர்பில் எச்சரிக்கை!

ஆகஸ்ட் 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பாறையில் பல ஏக்கர் நெல்வயல்கள் காட்டுயானைகளின் தாக்குதலினால் முற்றாக சேதம்!

ஆகஸ்ட் 1, 2026
இலங்கைஎங்கள் ஊர்

வெவேந்தன் மக்கள் கவனஈர்ப்பு போராட்டம்!

ஜூலை 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அஸ்வெசும 2ம் கட்டத்திற்கான ஜூன் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கி கணக்குகளில்

ஜூன் 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube