Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு 430 மின்சார மோட்டார் சைக்கிள்கள்!

நவம்பர் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையின் மீன்வளத்துறையில் களப்பணியாற்றும் அதிகாரிகளுக்கு 430 மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளன.

குறித்த ஒப்பந்தத்தில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் மீன்வள, நீரியல்வள மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்வு, அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் முன்னிலையில் நடைபெற்றது.

இத்திட்டத்திற்காக இந்திய அரசாங்கம் 265 மில்லியன் இலங்கை ரூபாவை மானிய உதவியாக வழங்கவுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த உதவி வழங்கப்படுகிறது.

மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களம், தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NAQDA), தேசிய நீர்வாழ் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகமை (NARA) உள்ளிட்ட நிறுவனங்களில் களப்பணியாற்றும் அதிகாரிகளுக்கு இந்த மின்சார மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன.

இதன் மூலம் அதிகாரிகளின் களப்பணித் திறன் மற்றும் செயற்பாட்டு வேகம் அதிகரிப்பதுடன், மீனவ சமூகங்களுடன் தொடர்ச்சியான தொடர்பைப் பேணவும், பொதுச் சேவைகளை விரைவாக முன்னெடுக்கவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தத் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டத்தின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை இலக்குகளுக்கும் பங்களிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் வீடமைப்பு, சுகாதாரம், கல்வி, மீன்வளம், போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவின் அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் – புதிய சீர்திருத்தங்களை விரைவுபடுத்த ஒரு தூண்டுதல்

ஜூலை 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வைரஸ் காய்ச்சலினால் மூடப்பட்ட தெனியாய பாடசாலைகள் மே 13 திறப்பு!

மே 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்திய விளையாட்டுப் பொருட்கள் உற்பத்திக்கு ரூ.18.56 பில்லியன் ஒதுக்கீடு!

அக்டோபர் 30, 2026
இலங்கைவானிலை

இன்று இடியுடன் கூடிய மழை!

ஜூலை 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube