இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்ட இன மோதல்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தனித்தனியாக இடம்பெற்ற இரண்டு சம்பவங்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அக்டோபர் 28ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த இரண்டு குக்கி இன இளைஞர்களின் சடலங்களும் செனாபதி பகுதியில் பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளதுடன், காங்போக்பி பகுதியில் 48 மணிநேர முழு அடைப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் நீண்டகாலமாக நீடித்து வரும் இன முரண்பாடுகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளமை கவலையை ஏற்படுத்தியுள்ளது.
