திருகோணமலை கப்பல்துறை சந்திக்கு அருகில் முச்சக்கரவண்டி ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை (02) இரவு சுமார் 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கப்பல்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பச்சை நிற முச்சக்கரவண்டியில் மூவர் பயணித்துக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் 39 வயதுடைய கயன் மதுசங்க சோமரத்ன என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும், 36 வயதுடைய சரித் அசங்க மற்றும் 28 வயதுடைய ஃபிரடெரிக் தர்ஷா டெவெண்டா ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கப்பல்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
