களனிப் பல்கலைக்கழகத்தின் பெண் மாணவியர் விடுதியில் உள்ள அறை ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (3) காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது குறித்த அறையில் இருந்த மாணவிகளின் அனைத்து உடைமைகளும் தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அறையில் மாணவிகள் எவரும் இருக்காததால் உயிர்ச்சேதமோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸாரும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
