Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியாவில் BBQ அடுப்பிலிருந்து வெளியான நச்சு வாயுவினால் தம்பதியினர் உயிரிழப்பு!

நவம்பர் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நுவரெலியா, மீப்பிலிமன பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதியினர், மூடிய அறைக்குள் BBQ அடுப்பைப் பயன்படுத்தியதால் வெளியான கார்பன் மோனாக்சைட் வாயுவைச் சுவாசித்து உயிரிழந்துள்ளனர்.

இன்று (3) அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பிரதேச உதவிப் பொலிஸ் கண்காணிப்பாளர் சந்தன பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவிசாவளையைச் சேர்ந்த 52 வயதுடைய ஆண் ஒருவரும், 46 வயதுடைய அவரது மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த ஆண் கப்பல் ஒன்றில் மாலுமியாகப் பணியாற்றி வந்துள்ளார்.

மீப்பிலிமன பகுதியில் சுற்றுலா விடுதி ஒன்றின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்த தம்பதியினர், பணிகள் நிறைவடையும் வரை அருகிலுள்ள வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்துள்ளனர்.

நுவரெலியாவில் நிலவிய கடும் குளிர் காரணமாக, BBQ அடுப்பை அறைக்குள் எரியவிட்ட நிலையில் இருவரும் உறங்கச் சென்றுள்ளனர். இதன்போது அடுப்பிலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைட் வாயுவைச் சுவாசித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகாலையில் உறவினர்கள் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றும் பதிலளிக்காததால், கிராம சேவகருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் வீட்டுக்குச் சென்ற கிராம சேவகர் இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதையடுத்து நானுஓயா பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

முக்கிய பாதுகாப்பு எச்சரிக்கை: நிலக்கரி அல்லது BBQ அடுப்புகளை மூடிய அறைகளுக்குள் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. நிறமற்றதும் மணமற்றதுமான கார்பன் மோனாக்சைட் வாயு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். BBQ அடுப்புகளை வீட்டுக்குள், குறிப்பாக உறங்கும் அறைகளில் ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டுபாயில் கைது செய்யப்பட்டார் ‘ஊரகஹ இந்திக’

அக்டோபர் 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்து வருவதால் வெளிப்படும் தெல்தெனிய பழைய நகரத்தின் இடிபாடுகள்

ஜூலை 28, 2026
இலங்கைஎங்கள் ஊர்

வெவேந்தன் மக்கள் கவனஈர்ப்பு போராட்டம்!

ஜூலை 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

10 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்குத் திரும்பிய பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

அக்டோபர் 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube