கவன்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு தொடர்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கொழும்பு காலி முகத்திடலில் இன்று செவ்வாய்க்கிழமை (3) கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, கவன்திஸ்ஸ யானை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் அதனை மறந்துவிட்டதாகப் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.
எனினும், நாட்டின் பொதுமக்கள் இந்தச் சம்பவத்தை ஒருபோதும் மறக்கவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

