சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆண்கள் ஒருநாள் சர்வதேச அணிகளுக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தான் அணி இலங்கையை முந்தி ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி தனது கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத உயர்ந்த ஒருநாள் தரவரிசை நிலையைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி தரவரிசையில் பின்தங்கியுள்ள நிலையில், எதிர்வரும் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு மீண்டும் முன்னேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
