சீனா – ரஷ்யா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பிரதான ஆற்றில் மிதந்து செல்லும் பனிக்கட்டிகள், சூரிய அஸ்தமனத்தின் ஒளியில் தங்க நிறத்தில் ஜொலிக்கும் அரிய இயற்கைக் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
குளிர்காலம் தீவிரமடைந்து ஆறு முழுமையாக உறைவதற்கு முன்னதாகவே இந்த அழகிய காட்சி பதிவாகியுள்ளது.
பனிப்பொழிவு மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக ஆற்று நீரில் மிதக்கும் பனிக்கட்டிகள் மீது மறையும் சூரியனின் கதிர்கள் படும்போது, அவை தங்கம் போன்று ஒளிர்கின்றன.
இந்த அபூர்வ இயற்கைக் காட்சியை அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
