இந்தியாவின் டெல்லி, மயூர் விஹார் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் வகுப்பறைக்குள் திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
நவம்பர் 4ஆம் திகதி புதன்கிழமை காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், 3ஆம் வகுப்பில் கல்வி பயிலும் சிறுமியே உயிரிழந்துள்ளார். வகுப்பறையில் ஆசிரியருக்கு அருகில் சென்றுகொண்டிருந்தபோது சிறுமி திடீரென தரையில் விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனைக் கண்ட ஆசிரியர் உடனடியாக சிறுமியைத் தூக்கி உதவ முயன்றதுடன், பாடசாலை ஊழியர்கள் அவரை அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் நிர்மான் விஹாரில் உள்ள மற்றொரு தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோது, சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வகுப்பறை கண்காணிப்பு கமரா (CCTV) காட்சிகளைப் பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகப் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ள போதிலும், உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் பின்னரே உறுதிப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறுமியின் குடும்பத்தினர் பாடசாலையில் உடனடி முதலுதவி மற்றும் CPR வழங்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
