இலங்கை விமானப்படைக்கான ஆளில்லா விமானக் கண்காணிப்பு அமைப்பை (UAV) நிறுவுவதற்காக 4,261 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யும் துணை மதிப்பீட்டு அறிக்கை இன்று (05) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான எட்டாவது துணை மதிப்பீடாக முன்வைக்கப்பட்டுள்ள இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
வங்காள விரிகுடா மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள பகுதிகளில் இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் சூழலில், மாறிவரும் செயல்பாட்டு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்த ஆளில்லா விமானக் கண்காணிப்பு அமைப்பை நிறுவுவதற்கு நிதி ஒதுக்கப்படுவதாக நாடாளுமன்ற அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விவாதம் மற்றும் ஒப்புதல் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன.
