அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்பாடு தொடர்பில் நம்பிக்கை குறைவடைந்துள்ளதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய தாக்குதல்களைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் நீடித்து வருகின்றது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் குறித்தும் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாக சர்வதேச ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் சர்வதேச பாதுகாப்பு மற்றும் எரிசக்தி சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அடுத்தகட்ட நகர்வுகள் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டு வருகின்றன.
