பராகுவே ஜனாதிபதி சந்தியாகோ பென்யா (Santiago Peña), நாட்டில் ஏற்பட்டுள்ள வங்கி நெருக்கடி மற்றும் அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பராகுவேயின் முன்னணி டிஜிட்டல் வங்கியான யுனோ வங்கி (Ueno Bank) கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளானதைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 3ஆம் திகதி அந்நாட்டு மத்திய வங்கி அதன் நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. வங்கியின் நிதி நிலைமை சட்டப்பூர்வத் தேவைகளைப் பூர்த்தி செய்யாததே இதற்குக் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வங்கியில் சுமார் 30 இலட்சம் வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளதுடன், வங்கியின் நடவடிக்கைகள் முடக்கப்பட்டதால் பலர் தங்களது வைப்புப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வங்கியின் நிர்வாகம் தொடர்பாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததுடன், ஜனாதிபதி சந்தியாகோ பென்யாவுக்கும் வங்கியின் முன்னாள் உரிமையாளர் குழுமத்துக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்த நெருக்கடியைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு எதிராகப் பதவி நீக்க நடவடிக்கையை முன்னெடுக்க நாடாளுமன்றத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையில், நவம்பர் 5ஆம் திகதி அவர் தனது பதவி விலகலை அறிவித்தார். அதே நாளில், நாடாளுமன்றத்தின் கீழவையில் அவருக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானமும் 78 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.
