Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதை அகழ்வுப் பணிகள் நிறைவு!

ஆடி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வடமத்திய மகா கால்வாய் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 27.7 கிலோமீற்றர் நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதையின் அகழ்வுப் பணிகள் இன்று (15) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் இறுதிக்கட்டமாகச் செயல்படுத்தப்படும் இத்திட்டம், வடமத்திய மற்றும் வட மாகாணங்களின் குடிநீர் மற்றும் விவசாய நீர்த் தேவைகளைப் பூர்த்திசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

May be an image of text

சுரங்கப்பாதையின் நீளம்: 27.7 கிலோமீற்றர்

பயன்படுத்தப்பட்ட TBM இயந்திரங்கள்: 2

கிட்டத்தட்ட74,000 ஹெக்டேயர் பரப்பில் வாழும்ர 15 இலட்சம் மக்கள் இதன் பலனை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

May be an image of train, railroad and text

இதன் முதற்கட்ட அகழ்வுப் பணிகள் 2022ஆம் ஆண்டு அனுராதபுரம், பலுகஸ்வெவ–மஹமீகஸ்வெவ பகுதியிலிருந்தும், 2 ஆம் கட்டப் பணிகள் 2023ஆம் ஆண்டு பொலன்னறுவை, எலகஹர–கொந்துருவாவ பகுதியிலிருந்தும் ஆரம்பிக்கப்பட்டன.

அகழ்வுப் பணிகள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்ததை முன்னிட்டு, இன்று (15) காலை அனுராதபுரம், பலுகஸ்வெவ பகுதியில் விசேட நிகழ்வொன்றும் நடைபெற்றது.

No photo description available.

இந்தச் சுரங்கப்பாதையின் ஊடாக வட மாகாணத்திலுள்ள 74,000 ஹெக்டேயர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன நீர் கொண்டுசெல்லப்படவுள்ளது.

வறண்ட வலய மக்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் குடிநீர்ப் பிரச்சினையைத் தணிப்பதற்கும் இது பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

May be an image of oil refinery

மேலும், ரஜரட்ட பிரதேசத்தில் நிலவும் காரணம் கண்டறியப்படாத நீண்டகால சிறுநீரக நோயின் தாக்கத்தைக் குறைப்பதற்குத் தூய குடிநீர் வழங்கல் உதவும் எனவும் நம்பப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

“கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” போராட்டம் தொடர்கிறது!

ஆடி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செட்டிகுளம் – நேரியகுளம் கிராம அலுவலர் அலுவலகத்தில் பதுக்கி வைக்கபட்டிருந்த புடவைகள் மீட்பு!

ஆனி 12, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

தடைகளைத் தாண்டி வெளியாகிறது ஜன நாயகன்…!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

6 படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இனியபாரதிக்கு விளக்கமறியல்!

ஆடி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube