Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரத்தினபுரி வனவிலங்கு மற்றும் காணிப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!

ஆடி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இரத்தினபுரி மாவட்டத்தின் கல்தொட்ட மற்றும் வெலிகேபொல பிரிவுகளில் வனப் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்த விசேட கலந்துரையாடல், அண்மையில் (14) பலங்கொடை சமனலவெவ நீர்மின் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக படபெந்தி தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.

இங்கு பிரதேச மக்கள் தங்கள் பிரச்சினைகளை அதிகாரிகளிடம் நேரடியாக முன்வைத்ததுடன், அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது இத்தாகலயாய காணிப் பிரச்சினை, யானை வேலி அமைத்தல், அரச காணி எல்லைப் பிரச்சினைகள் மற்றும் வேவெல்கந்துருஆர கட்டுமானத்திற்கான அனுமதி குறித்து ஆராயப்பட்டது.

மேலும், லுனுமெடில்ல நீர்வீழ்ச்சி வளாகத்தை சுற்றுலாப் பயணிகளுக்காக மேம்படுத்தும் போது, சூழல் மற்றும் பல்லுயிர்த்தன்மைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாப்பது குறித்தும், வெலிமடை அணைக்கட்டை புனரமைப்பதன் மூலம் கிராமங்களுக்குள் காட்டுயானைகள் நுழைவதைத் தடுத்து, உயிர் மற்றும் சொத்து சேதங்களைக் குறைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பால் உற்பத்தியாளர்களின் புல் தேவைகளுக்கான தடைகளை நீக்குதல் மற்றும் விவசாயம், கால்நடைத் துறைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத் தடைகளை அகற்றுவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ, வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.எஸ்.சி. பாலக்கும்புர, செயல்பாட்டுப் பணிப்பாளர் யு.எல். தௌபீக் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய வெற்றி தினம் இன்று!

வைகாசி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு பயணத்தடை நீக்கம்!

வைகாசி 26, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கட்டாரில் முக்கிய பேச்சுவார்த்தை!

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சி.டி. விக்ரமரத்னவின் மரணம்: இரசாயன அறிக்கைக்குப் பின்னரே இறுதி முடிவு – அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்!

ஆடி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube