Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச ஊழியர்களின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்தும் திட்டம்?

ஆடி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அனைத்து அரச பணியாளர்களினதும் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அரச உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய நடைமுறையின்படி, பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக காணப்படுகிறது. எனினும், சில விசேட துறைகளில் பணியாற்றுவோருக்கு வேறுபட்ட ஓய்வு வயது நடைமுறையில் உள்ளது.

இதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு 61 வயதும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களுக்கு 63 வயதும், உயர் நீதிமன்ற நீதியரசர்களுக்கு 65 வயதும், விசேட மருத்துவ நிபுணர்களுக்கு 63 வயதும் ஓய்வு வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை 67 ஆக உயர்த்துவது தொடர்பிலும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பது தொடர்பான விவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில், பல தொழில்முறை அமைப்புகளும் தங்களது துறைகளில் ஓய்வு வயதை உயர்த்துமாறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அரச நிறுவன ஊழியர்களின் EPF மற்றும் ETF போன்ற நிதி நன்மைகளை மேலும் சில ஆண்டுகள் தாமதமாக வழங்கும் வாய்ப்பு உள்ளிட்ட காரணிகளும் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரச நிதி நிலையை வலுப்படுத்துவதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை உதவக்கூடும் என அரச தரப்பு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

விவசாயிகள் இப்போது மகிழ்ச்சியில் – வசந்த சமரசிங்க

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் பற்றி பொதுமக்களுக்கான அறிவித்தல்

ஆடி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘டுபாய் சுத்தா’ கைது!

ஆனி 1, 2026
இலங்கைவானிலை

பல பகுதிகளில் வரட்சியான வானிலை!

ஆடி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube