அரச சார்பற்ற நிறுவன பணியாளர்களுக்கான திட்ட முன்மொழிவு எழுதுதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழினுட்பம் தொடர்பான விஷேட செயலமர்வு இன்று (16) முல்லைத்தீவு மாவட்ட சர்வோதயா மண்டபத்தில் நடைபெற்றது.

உயர்தரமான திட்ட முன்மொழிவுகளை உருவாக்குவதிலும், திட்டமிடல், முன்மொழிவு உருவாக்கம் மற்றும் நிறுவனப் பணிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைத் திறம்படப் பயன்படுத்துவதிலும், அரசு சாரா நிறுவனப் பணியாளர்களின் அறிவையும் திறன்களையும் மேம்படுத்துவதற்காக, முன்மொழிவு எழுதுதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த ஒரு பயிற்சித் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து றிதம் அறக்கட்டளையின் நிதி அனுசரணையில் தேசிய சர்வோதய சிரமதான சங்கத்துடன் இணைந்து முல்லைத்தீவு மாவட்ட சர்வாதய அலுவலகத்தில் மண்டபம் புனரமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த மண்டபமானது தங்குமிடம் மற்றும் நிகழ்வுகள் நடாத்துவதற்கு பொதுமக்களுக்காக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
