Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவிளையாட்டு

எல்.பி.எல் : கோல் கெலன்ட்ஸ் அணி வெற்றி!

ஆடி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
LPL  கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியாக நேற்று (17) நடைபெற்ற முதலாவது போட்டியில், ஜப்னா கிங்ஸ் அணியைத் தோற்கடித்து 36 ஓட்டங்களால் கோல் கெலன்ட்ஸ் அணி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.

கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மைதானத்தில் இரவுப் போட்டியாக நடைபெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய கோல் கெலன்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்கள் என்ற பிரம்மாண்டமான ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றது.

அங்கு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சரித் அசலங்க, 38 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 65 ஓட்டங்களைக் குவித்தார்.

இதற்கு மேலதிகமாக, அவுஸ்திரேலிய வீரர் சாம் ஹார்பர் 19 பந்துகளில் வேகமாக 40 ஓட்டங்களை தனது அணியிக்காக பெற்றுக்கொடுத்தார்.

துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்திய அணியின் தலைவர் தசுன் ஷானக 12 பந்துகளில் 31 ஓட்டங்களையும் சஹான் ஆராச்சிகே 35 ஓட்டங்களையும்  பெற்றனர்.

214 ஓட்டங்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணியால் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

ஜப்னா அணி சார்பில் துனித் வெல்லாலகே  40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கன்னியா வெந்நீரூற்றின் வரலாற்றை மாற்றியமைப்பது வேதனையளிக்கிறது – கலாநிதி ஆறு.திருமுருகன்

ஆடி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி விசேட கவனம்!

ஆடி 25, 2026
இலங்கை

கட்டுநாயக்காவில் விமானம் அவசர தரையிறக்கம்!

ஆடி 11, 2026
இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

இலங்கையில் முதல் முறையாக AI ரோபோடிக் சத்திர சிகிச்சை

ஆடி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube