புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு அமைய, தொழிற்கல்வித் துறையை வலுப்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (17) நடைபெற்ற கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் 2026 ஆம் ஆண்டு பாதீட்டு திட்ட ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தொழிற்கல்வித் துறைக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை இந்த வருட பாதீட்டு திட்டத்திலிருந்து வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன், தொழிற்கல்வித் துறைக்காக இந்த வருடம் 8 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையும் இந்தச் சந்திப்பின் போது வெளிப்படுத்தப்பட்டது.
