FIFA உலக கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் நடப்புச் செம்பியனான ஆர்ஜன்டினா அணியை 1 – 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
உலக கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் இரண்டாவது தடவையாகவும் ஸ்பெயின் உலக கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2010ம் ஆண்டு முதன்முறையாக ஸ்பெயின் கால்பந்தாட்ட உலக கிண்ணத்தை வென்றது.
அதனையடுத்து 16 வருடங்களின் பின்னர் குறித்த அணி மீண்டும் இறுதிப் போட்டியொன்றிற்கு முன்னேறி அதில் கிண்ணத்தையும் வென்றமை விசேட அம்சமாகும். ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியின் குறிப்பிட்ட நேரத்திற்குள் எந்தவொரு அணியும் கோல்கள் பெறாத நிலையில் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.
குறித்த மேலதிக நேரத்தின் 106வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் Ferran Torres கோல் ஒன்றை அடித்து ஸ்பெயினின் கைகளில் உலக கிண்ணம் வந்துசேர வழிவகுத்தார். ஆர்ஜன்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி மற்றும் எதிர்பார்க்கப்பட்ட வீரர் பெர்னான்டஸ் கோல்களை பெறவில்லை.
போட்டியின் போது பெர்னான்டஸ் வீரருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு அவர் ஆடுகளத்திலிருந்து வெளியேற்றப்பட்டமை ஆர்ஜன்டினாவின் வெற்றியை கேள்விக்குறியாக்கியது.
இதனால் மேலதிக நேரத்தில் ஆர்ஜன்டினா அணி 10 வீரர்களுடன் விளையாடியது. நிவ்யோர்க்கில் இடம்பெற்ற இந்த போட்டியை பார்வையிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சென்றிருந்தார்.
