ஜூலை மாதத்தின் முதல் 15 நாட்களில் 90,122 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கிறது.
இதற்கமைய 2026 ஜனவரி 01 முதல் ஜூலை 15 வரையான காலப்பகுதியில் ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 1,236,695 ஆகப் பதிவாகியுள்ளது.
அவர்களில் இந்தியாவிலிருந்து 314,163 சுற்றுலாப் பயணிகளும்,பிரித்தானியாவில் இருந்து 117,844 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
