Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

வாகன நெரிசல், வாகன தரிப்பிடங்களை எளிதாக கண்டறிய உதவும் டிக்டொக் நேரலை

ஆடி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் உள்ள BTS Mo Chit புகையிர நிலையத்துக்கு அருகில் வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களை சாரதிகள் எளிதாகக் கண்டறிய உதவும் டிக்டொக் நேரலை ஒன்று சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.

இந்த டிக்டொக் கணக்கு, தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளதுடன், ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.

பேங்கொக்கின் முக்கிய போக்குவரத்து மையங்களுக்கு அருகில், குறிப்பாக காலை நேர அவசரப் போக்குவரத்தின் போது தரிப்பிடங்களை கண்டுபிடிப்பது வாகன சாரதிகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.

இதனை உணர்ந்த அந்த டிக்டொக் கணக்கின் உரிமையாளர், BTS Mo Chit புகையிரத நிலையத்தின் ‘பார்க் அண்ட் ரைட்’ (Park & Ride) வசதியைக் கண்காணிக்கும் வகையில், அருகிலுள்ள உயரமான கட்டடத்திலிருந்து நேரலையைத் தொடங்கியுள்ளார்.

இந்த நேரலையில் தரப்பிடங்கள் ‘பறவைப் பார்வை’ (Bird’s-eye view) மூலம் காட்டப்படுவதுடன், அங்கிருந்து புறப்படத் தயாராகும் வாகனங்களைக் கண்டறிந்து, வெற்றிடமாகும் இடங்கள் குறித்து வாகன சாரதிகளுக்கு உடனுக்குடன் நேரலையில் வழிகாட்டப்படுகிறது.

BTS Mo Chit தரிப்பிட தளத்தில் சுமார் 1,500 வாகனங்களை நிறுத்த முடியும் என்றபோதிலும், காலை 7 மணி முதல் 9 மணி வரையிலான நேரத்தில் அங்குள்ள இடங்கள் விரைவாக நிரம்பிவிடுகின்றன.

இந்நிலையிலேயே, இந்த நேரலை வாகன சாரதிகளுக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது. நகைச்சுவையான வர்ணனையுடன் நடத்தப்படும் இந்த நேரலையின் மூலம் தரிப்பிடம் கிடைக்கும் வாகன சாரதிகள் கேமராவைப் பார்த்துக் கையசைத்தும், ஒலியெழுப்பியும், பரிசுகளை அனுப்பியும் தங்கள் நன்றியைத் தெரிவித்து வருகின்றனர்.

திங்கள் முதல் வியாழன் வரை காலை 7:30 முதல் 9 மணி வரை இயங்கும் இந்த நேரலை, வெறும் பொழுதுபோக்கிற்கு அப்பால் மக்களின் அன்றாடப் பிரச்சினைக்குத் தீர்வு தரும் தொழில்நுட்பப் பயன்பாடாகப் பாராட்டப்பட்டு வருகிறது.

 

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலையில் 2 கிலோவுக்கு மேற்பட்ட ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடலலையில் இழுத்து செல்லபட்ட இளைஞன் பாதுகாப்பாக மீட்பு!

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலித்தீன் மற்றும் இலத்திரனியல் கழிவுகளை மீள்சுழற்சி செய்ய புதிய விதிமுறைகள் அறிமுகம்!

ஆடி 5, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

இந்தோனேசிய துணை வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்!

சித்திரை 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube