Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஒன்லைன் பொருட்கொள்வனவு தொடர்பில் அவதானமாக இருங்கள்!

ஆடி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஒன்லைன் (online ) மூலமாகப் பொருட்களை வீடுகளுக்கே கொள்வனவு செய்வோரை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் இணையவழி மோசடிகள் குறித்துப் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாடிக்கையாளர்கள் ஒன்லைன் ஊடாக கொள்வனவுக்காக பதிவு செய்யாத பொருட்கள் விநியோகிக்கிக்கப்படும் போது மூன்றாம் தரப்பினரால் ஏற்படுத்தப்படும், தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு அறிவுருத்தியுள்ளது.

இவ்வாறான மோசடிகளின் போது குறித்த பதிவு செய்யப்படாத பொருளை இரத்து செய்ய வேண்டும் எனக் கூறி குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்அப் செயலி ஊடாக இணைய இணைப்பு ஒன்றினை அனுப்பிவைக்கப்படுவதாகவும், குறித்த இணைப்பை அனுகுவதன் மூலம். இரகசியக் குறியீட்டைப் பெற்று, தரவுகளை கையாளக் கூடிய செயலிக் கோப்புகளைப் பதிவிறக்கம் செய்ய வைப்பதன் மூலம் தொலைபேசி , கணினியில் உள்ள தரவுகளை பெற்றுக்கொள்கின்றனர்.

அத்தோடு, போலியான விநியோக முகவர்களும் நேரடியாக வந்து, பொருள் கொள்வனவுக்கான பதிவை இரத்து செய்வதாகக் கூறி இணைப்பை அனுகுமாறு தெரிவித்து, வங்கிக் கணக்கு விபரங்கள் மற்றும் தனிப்பட்ட தரவுகள் மோசடிகாரர்கலால் திருடப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

ஆகையால், அறிமுகமில்லாத நபர்கள் அனுப்பும் இணைப்புகளை அனுகுவதையோ, ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் மற்றும் பின் எண்களைப் பகிர்வதையோ தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகத்திற்கிடமான செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாமெனவும், விநியோக முகவரின் அடையாளத்தை நேரடியாக உறுதிப்படுத்துமாறும், மோசடி தொடர்பில் சந்தேகம் ஏற்படின் உடனடியாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு, பொலிஸார் மற்றும் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

புதுக்குடியிருப்பு–பரந்தன் வீதியில் இருவேறு இடங்களில் விபத்துக்கள் – இருவர் படுகாயம்

ஆடி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டியில் கட்டிடம் உடைந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் காயம்!

வைகாசி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2030க்குள் கதிர்காமத்தை பிளாஸ்டிக் அற்ற வலயமாக மாற்ற திட்டம்!

ஆடி 18, 2026
இலங்கைஎங்கள் ஊர்

கும்புகன் ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி!

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube