நல்லதண்ணியிலிருந்து மாஸ்கெலியா செல்லும் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று திடீரெனப் பாதையை விட்டு விலகி, வீதியோரத்திலிருந்த மோகினி நீர்வீழ்ச்சிக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து இடம்பெற்ற முச்சக்கர வண்டியில் இரு பெரியவர்களும் இரு சிறுவர்களும் பயணித்துள்ளனர்.
சம்பவ இடத்திலேயே இரு பெரியவர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த இரு சிறுவர்களும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
