உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், தன்னை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்கும் உத்தரவை கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனு மீதான மேலதிக பரிசீலனையை ஓகஸ்ட் 3ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இம்மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கோட்டாபய ராஜபக்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தனது பதிலுரைகளை முன்வைத்தார்.
இதையடுத்து, வழக்கு தொடர்பான மேலதிக சமர்ப்பணங்களை பரிசீலிப்பதற்காக விசாரணையை ஓகஸ்ட் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
