காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை சாலை பகுதியில் அமைந்துள்ள காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் மூன்றாவது மாடியில் இன்று (27) முற்பகல் 11.00 மணி அளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. 3வது மாடியில் பொருத்தப்பட்டுள்ள மின்விசிறி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதன்போது வைத்தியசாலை பணியாளர்கள் தீயை விரைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
மின்விசிறியில் ஏற்பட்ட மின்சாரக்கோளாறு காரணமாகவே இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது. மேலும் உயிர்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை!
