தனிநபர் அரசியலை விட நாட்டின் மக்களின் நலனே முன்னுரிமை என்பதால், எவ்வளவு சவாலான சூழ்நிலையிலும் கொள்கை அடிப்படையிலான தீர்மானங்களை எடுப்பதில் தாம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் நீதித்துறை முழுமையாக சுயாதீனமாக செயல்பட வேண்டும் என்றும், அதன் மீது அரசாங்கத்தின் அரசியல் தலையீடு முற்றிலும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் இந்த நோக்கத்துடனேயே தாங்கள் ஒன்றுகூடியதாகக் குறிப்பிட்ட அவர், நீதித்துறையின் சுதந்திரத்தையும் ஜனநாயக ஆட்சிமுறையையும் பாதுகாக்கும் வகையில் தொடர்ந்து செயற்படுவோம் என்றும் தெரிவித்தார்.
