சீனா, ட்ரோன்களின் உதவியுடன் காட்டுத் தீயை அணைக்கும் திறன் கொண்ட ஒரு தீயணைப்பு வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வாகனம் 10 ட்ரோன்களைக் கொண்டுள்ளது. இவை சில நொடிகளில் புறப்பட்டு, ஆரம்பகட்ட தீ விபத்துகளின் மீது நேரடியாக “நீர் குண்டுகளை” வீசும் திறன் கொண்டவை.
பாரிய தீ பரவல் ஏற்படும் இடங்களுக்கு தீயணைப்பு வாகனங்கள் சென்றடைய முன்னரே இந்த ட்ரோன்கள்
சென்றடைந்து உடனடியாகத் தீயை கட்டுப்படுத்துவதே இதன் பிரதான நோக்கம்.
