Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிகப்படியான புகையை வெளியிடும் வாகனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும்!

Vehicle smoke | Kandy | SriLanka | QuickTamilNews

வைகாசி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அளவுக்கதிகமாக புகையை வெளியிடும் வாகனங்களை அடையாளம் கண்டு, அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக பராமரிப்புக் கட்டளைகள் பிறப்பிக்கப்படும் எனவும், அதையும் மீறுவோரின் வாகனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் இன்று வியாழக்கிழமை (7) அறிவித்துள்ளது.

கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் வாகனங்களுக்கு வருமான வரி அனுமதிப்பத்திரம் பெறுவதிலும், ஏனைய ஆவணக் கொடுக்கல் வாங்கல்களிலும் கடும் தடைகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கண்டி மாவட்டத்தின் கெட்டம்பே மற்றும் கட்டுகஸ்தோட்டை பகுதிகளில் நடமாடும் புகைப் பரிசோதனைப் பிரிவுகள் மூலம் கடந்த 6ஆம் திகதி முதல் நாளை வெள்ளிக்கிழமை (8) வரை விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வாகனங்களில் இருந்து வெளியேறும் கறுப்புப் புகை என்பது ஒரு தொழில்நுட்பக் கோளாறு மட்டுமல்ல, அது சுற்றுச்சூழலுக்கு இழைக்கப்படும் தீங்கு என சுட்டிக்காட்டியுள்ள திணைக்களம், வாகனங்களை உடனடியாக முறையாகப் பராமரிக்குமாறும் கோரியுள்ளது.

நிர்வாக மாற்றங்கள் காரணமாக சற்று மந்தகதியில் இருந்த இந்த வீதிப் புகைப்பரிசோதனை நடவடிக்கைகள், இம்மாதம் முதல் மீண்டும் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்படவுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ஜோர்தான் பிரின்ஸ் ஹசன் வானூர்தி தளம் மீது ஏவுகணை தாக்குதல்

ஆடி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாடப் புத்தகங்களுக்கான புதிய தொழில்நுட்பக் கட்டமைப்பு முறைமை!

ஆடி 4, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

உக்ரைன் மீதான அணு ஆயுதத் தாக்குதலை மோடி தடுத்தார் – போலந்து அமைச்சர் தகவல்!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ். வீட்டுத் திட்ட பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு!

ஆனி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube