Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

யாழில் நடமாடும் கோள்மண்டலம்!

ஆடி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரி மைதானத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மாபெரும் நடமாடும் கோள்மண்டலக் காட்சி தொகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குளிரூட்டப்பட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கோள்மண்டலத்தில், கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் விண்வெளி தொடர்பான விடயங்களை யதார்த்தமான அனுபவத்துடன் மாணவர்களும் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான அறிவை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் காட்சிக்கூடம், பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரமன்றி பொதுமக்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

குறித்த நடமாடும் கோள்மண்டலக் காட்சி எதிர்வரும் ஆகஸ்ட் 09ஆம் திகதி வரை தினமும் மாலை 5.00 மணி முதல் 6.30 மணி வரையும், இரவு 7.00 மணி முதல் 8.30 மணி வரையும் இடம்பெறவுள்ளது.

மாகாண கல்வி அமைச்சின் அனுமதியுடன் நடைபெறும் இந்த நிகழ்வை, மாணவர்கள் பாடசாலைகள் ஊடாக முன்பதிவு செய்து பார்வையிட முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலதிக தகவல்களுக்கு 0777826217 அல்லது 0761089005 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்ளலாம்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல்; துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு நீதி அமைச்சர் ஆதரவு!

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சமூகப் பாதுகாப்பு தொடர்பான தேசிய செயற்பாட்டுத் திட்டம்

ஆவணி 31, 2026
இந்தியாஇலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

அகமதாபாத்–கொழும்பு நேரடி விமானம் ஆரம்பம்!

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு

ஆடி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube