Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஇலங்கை

இலங்கைக்கான இந்திய உதவிகள் 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது!

ஆடி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதாகவும், இதில் 850 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகை நன்கொடைகளாக வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் பாலி மொழி ஆய்வுகளை வலுப்படுத்துதல்” (Strengthening Pali Language Studies in Sri Lanka) என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் உதவிகள் நாட்டின் 25 மாவட்டங்களிலும் உட்கட்டமைப்பு, வீடமைப்பு, சுகாதாரம், வாழ்வாதாரம், புனர்வாழ்வு, கல்வி, விவசாயம், புதுப்பிக்கத்தக்க சக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை, இந்தியாவின் ‘அயல்நாடு முதலில்’ (Neighbourhood First) என்ற கொள்கை மற்றும் ‘விஷன் மஹாசாகர்’ திட்டத்தின் முக்கிய அங்கமாக இருப்பதாகவும் சந்தோஷ் ஜா குறிப்பிட்டுள்ளார்.

பெரும் நெருக்கடிகளின்போது இலங்கைக்கு முதலில் உதவ முன்வந்த நாடாக இந்தியா செயற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய ‘டித்வா’ புயல் மீட்பு நடவடிக்கைகள், பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா தொற்றுக் காலங்களில் இந்தியா வழங்கிய உதவிகள் விரைவானதாகவும் சரியான நேரத்திலும் நிபந்தனையற்றதாகவும் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் நெருங்கிய அயல்நாடாக இந்தியா, வரலாற்று மற்றும் கலாசார உறவுகளைத் தாண்டி வர்த்தகம், முதலீடு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பிலும் உறவை விரிவுபடுத்தியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சாவகச்சேரியில் சட்டவிரோத மணலுடன் பயணித்த டிப்பர்கள் – தீவிர விசாரணை

ஆனி 25, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

லெபனான் ஜனாதிபதி – அமெரிக்க தளபதி சந்திப்பு: எல்லை பாதுகாப்பு குறித்து ஆலோசனை

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

12 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு TIN இலக்கம் வழங்கப்பட்டுள்ளது!

ஆனி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பரதநாட்டிய கின்னஸ் சாதனை சர்ச்சை: அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!

ஆனி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube