Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெரும்பான்மையான மக்கள் அரசாங்கத்துடனேயே உள்ளனர் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்!

ஆடி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டில் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துடனேயே இருப்பதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் நேற்று (26) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அண்மையில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்குப் பிறகு எதிர்க்கட்சி குழப்பமான நிலையில் இருப்பது தெளிவாகியுள்ளதாக கூறினார்.

அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பதற்குப் பதிலாக, வலுவான எதிர்க்கட்சியை உருவாக்குவதற்கான பொறுப்பை எதிர்க்கட்சித் தலைவர் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், எதிர்க்கட்சியில் பிணையில் உள்ளவர்களும் பல்வேறு ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்களும் இருப்பதாக குற்றம்சாட்டிய அவர், நாட்டின் மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தார்.

அதேவேளை, மலையகப் பகுதியில் கல்வி வளர்ச்சி தேசிய மட்டத்துடன் ஒப்பிடுகையில் பின்தங்கியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், ஆசிரியர் பற்றாக்குறை, பாடசாலைகளுக்கான காணி உரிமை, தோட்டப்பகுதி பாடசாலைகளுக்கான வீதி அபிவிருத்தி உள்ளிட்ட 22 முக்கிய கோரிக்கைகள் தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுதினம் இப்போது திருவிழாக்களாக மாற்றப்பட்டுள்ளது – அருட்தந்தை மா.சத்திவேல்!

வைகாசி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

23 வயதுடைய இளைஞன் மர்மமான முறையில் உயிரிழப்பு!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டியில் 5 மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 3 தொழிலாளர்கள் படுகாயம்!

வைகாசி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மத்திய கலாசார நிதியம் தனது உண்மையான நோக்கில் செயல்படுகிறது – பிரதமர் ஹரிணி!

ஆனி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube