Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

துன்ஹிந்த அபிவிருத்திக்கு 200 இலட்சம் ரூபா ஒதுக்கீடு!

ஆடி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்த்த, பதுளை – சொரணாதோட்ட பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள துன்ஹிந்த நீர்வீழ்ச்சி வளாகத்தில் புதிய பார்வையாளர் மையத்தை (Viewing Deck) அமைக்கும் திட்டம் நேற்று (27) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

துன்ஹிந்த நீர்வீழ்ச்சியின் பழைய பார்வையாளர் மேடைக்கு அருகில் இந்த விழா இடம்பெற்றது.

50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமையானதும், தற்போது சேதமடைந்த நிலையிலுள்ளதுமான பழைய பார்வையாளர் மேடைக்குப் பதிலாக அமைக்கப்படும் இந்தப் புதிய மையத்திற்காக ஊவா மாகாண சுற்றுலா அமைச்சினால் 200 இலட்சம் (20 மில்லியன்) ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உயர்தரமான பார்வையிடும் அனுபவத்தையும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இந்நிகழ்வில், சொரணாதோட்ட பிரதேச சபையின் தவிசாளர் ஜெயலத் எதிரிமான்ன உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆனைவிழுந்தான் புகையிரத உப-நிலையம் மீண்டும் திறப்பு

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

வங்காள விரிகுடாவில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து வருகிறது – இனி இலங்கைக்கு பாதிப்பில்லை!

வைகாசி 17, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ ஷென்ஹொங் இம்மாத இறுதியில் விடைபெறுகிறார்!

ஆடி 22, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

பொலிஸ் பரிசோதகர் இலஞ்ச வழக்கில் கைது!

ஆனி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube