Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

315 வாகன சாரதிகள் கைது – சிறுநீர் மாதிரிகளில் கஞ்சா கலந்திருப்பதாக சட்ட வைத்திய அதிகாரி தகவல்

ஆடி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

போதைப்பொருள் பாவனையால் 315 சாரதிகள் கைது. சிறுநீர் மாதிரிகளில் கஞ்சா கலந்திருப்பதாக சட்ட வைத்திய அதிகாரி தகவல்

வாகன சாரதிகள் உணவு உட்கொண்ட பின்பு, அவர்களது சிறுநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், அவற்றில் கஞ்சா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து, அந்த சாரதிகள் போதைப்பொருள் உட்கொண்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராதனை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பாலித பண்டார சுபசிங்ஹ தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பாவனையால் கடந்த 6 மாத காலப்பகுதியில் 315 சாரதிகளை கண்டி, மாத்தளை மற்றும் கம்பளை பகுதிகளில் போக்குவரத்துப் பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதையும் சுபசிங்ஹ சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதான போக்குவரத்துப் பாதைகளின் இரு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஒரு சில வியாபார நிலையங்களில் தொடர்ச்சியாக வாகன சாரதிகள் உணவு உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களின் சிறுநீர் மாதிரிகள் சோதனையிட்ட பொழுதே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இது தொடர்பாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இதுபோன்ற வியாபார நிலையங்களில் எவ்வாறான சுகாதாரம் பேணப்படுகிறது என்பது குறித்தும் சட்ட வைத்திய அதிகாரி கேள்வி எழுப்புகிறார்.

மேலும், வைத்திய அறிக்கைகள் ஊடாக சில சாரதிகள் போதைப்பொருள் உட்கொண்டுள்ளமை தொடர்பாக குற்றம் சுமத்தப்படுகின்றனர். இது இவர்களை அறியாமல் நடப்பதாகவும் இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்படும் புகைப்பொருட்களை, விலை குறைவு என்பதால் வாகன ஒட்டுநர்கள் வாங்கி உட்கொள்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக பேராதனை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பாலித பண்டார சுபசிங்ஹ மேலும் குறிப்பிட்டுள்ளார்

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தெல்லிப்பழை புற்றுநோய் பிரிவு மருத்துவர் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்பியமை தொடர்பில் அர்ச்சுனாவுக்கு எதிராக வழக்கு தாக்கல்!

வைகாசி 30, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

“டொக்சிக்”. திரைப்படத்தின் வெளியீட்டு திகதியில் மாற்றம்!

சித்திரை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பயணக் கொடுப்பனவை அதிகரிக்கக் கோரி கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு!

ஆவணி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கனடாவில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பணமோசடி!

வைகாசி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube