Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கனடாவில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பணமோசடி!

வைகாசி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கனடாவில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி 40 இலட்சத்துக்கும் அதிக தொகையை மோசடி செய்த நபர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இந்த இளைஞர், யுவதிகளை ஏமாற்றி, கனடாவின் சுப்பர் மார்க்கெட்டுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு 7 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில், விசாரணைகளை ஆரம்பித்த அதிகாரிகள், சந்தேக நபரைக் கைது செய்ய பல முறை முயன்றபோதிலும் அவர் தொடர்ந்து தலைமறைவாகி இருந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பொலிஸ் விசேட பணியகத்தின் அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டுச் சுற்றிவளைப்பின்போது, குச்சவெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞராவார்.

இவருக்கு எதிராக ஏற்கனவே நீர்கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் அவிசாவளை ஆகிய நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்த நபருக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட மேலும் பலரிடமிருந்து தொடர்ந்தும் முறைப்பாடுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

ஆரம்பக்கட்ட விசாரணைகளில் மோசடித் தொகை 40 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டிருந்தபோதிலும், தற்போது நடத்தப்பட்டுள்ள விரிவான விசாரணைகளின்படி இவர் மோசடி செய்துள்ள மொத்த பணம் 1 கோடி ரூபாய்க்கும் அதிகம் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அதிகாரிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது!

ஆனி 6, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநிலங்களவை உறுப்பினர் யார்?

வைகாசி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிலாபம் பொது வைத்தியசாலை பாதுகாப்பு அதிகாரிகள் மூவர் மீது தாக்குதல்!

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள்!

வைகாசி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube