Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தொழில்நுட்பக் கோளாறால் ஸ்தம்பித்த புகையிரதம் – பயணிகள் வேறு புகையிரத்துக்கு மாற்றிவிடப்பட்டனர்.

ஆடி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

காங்கேசன்துறை துரிதகதி புகையிரதம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெயாங்கொடை புகையிரத நிலையத்தில் பழுதடைந்து நின்றதால், பயணிகள் பெரும் தாமதங்களையும், நெரிசலையும் சந்தித்துள்ளனர்.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து காலை 5.45 மணிக்குப் புறப்பட்ட இந்த புகையிரதம், காலை 8.00 மணியளவில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளானது.

பூரணை தினம் என்பதால் அனைத்து ஆசனங்களும் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து, பழுதடைந்த புகையிரத்துக்குப் பின்னால் வந்த ‘யாழ் தேவி’ விரைவு புகையிரதத்தில் பயணிகள் ஏற்றிவிடப்பட்டனர்.

இதனால் 2 புகையிரதங்களின் பயணிகள் ஒரே சேவையில் பயணிக்க நேரிட்டதுடன், கடும் மக்கள் நெரிசலும் அசௌகரியமும் ஏற்பட்டது.

வெயாங்கொடை மற்றும் அதனைத் தொடர்ந்துள்ள புகையிரத நிலையங்களில் காத்திருந்த பயணிகளுக்காக, முற்பகல் 10.30 மணிக்கு வெயாங்கொடையிலிருந்து காங்கேசன்துறைக்கு விசேட மாற்று புகையிரத சேவையை தொடருந்து திணைக்களம் இயக்கியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிவனொளிபாதமலை உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் கேபிள் கார் வசதி!

சித்திரை 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல்: 24 பேரின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியீடு!

ஆடி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருள் நுகர்வு குறைந்தாலும் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு!

ஆனி 2, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்!

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube