ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (29) இரவு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லேயாஸ் பிராட்வே பகுதியில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 772 கிராம் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 75,000 ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
