நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் உலகளவில் வசூல் சாதனைகளை தொடர்ந்து பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திரைப்படம் வெளியான முதல் 7 நாட்களில், இந்தியாவில் ரூ.174.63 கோடி வசூலித்துள்ளதாகவும், வெளிநாடுகளில் ரூ.81 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம், ‘ஜனநாயகன்’ திரைப்படம் உலகளவில் மொத்தமாக ரூ.255.63 கோடி வசூலைப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதுடன், வசூல் மேலும் அதிகரிக்கும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
