Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறையில் சகோதரனை பார்வையிடவந்த தம்பி – போதை பொருளுடன் கைது!

ஆடி 30, 2026
படிக்க 2 நிமிடங்கள்

(கனகராஜா சரவணன்)

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட, போதை பொருள் வியாபாரியை பார்வையிடுவதற்காக, கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு சென்று அங்கு ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த தெமட்டகொடையைச் சேர்ந்த, சிறையில் உள்ள போதை பொருள் வியாபாரியின் சகோதரர் மற்றும் நண்பர் ஆகிய இருவரை ஜஸ் மற்றும் ஹெரோயின் போதை பொருள்களுடன் நேற்று புதன்கிழமை (29) இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது

கடந்த ஏப்ரல் 7ம் திகதி 7 அரைக் கிலோ கொண்ட ஜஸ் போதைப் பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட போதை பொருள் வியாபாரி நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட படுகொலை சம்பவத்தை அடுத்து அங்கிருந்து குறித்த போதை வியாபாரி உட்பட 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில் குறித்த சகோதரனை பார்வையிட அவரது தம்பியும் அவரின் நண்பரும் கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு சென்று கல்லடி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து மட்டு தலைமைய பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான நேற்று (29) இரவு குறித்த ஹோட்டலை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.

இதன்போது அங்கு அறையில் இருந்த தொட்ட கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 31 வயதுடைய இருவரை 100 மில்லிக்கிராம் ஹரோயின் 500 மில்லி கிராம் ஜஸ் போதை பொருட்களுடன் கைது செய்தனர்

இதில் போதை பொருள் வியாபரியின் சகோதரன் ஏற்கனவே போதை பொருட்களுடன் கைது செய்யப்பட்டு கடந்த ஒன்றரை வருடங்கள் சிறையில் இருந்து, நீதிமன்ற பிணையில் அண்மையில் வெளிவந்துள்ளதாகவும், அவர்கள் இருவரும் போதைப்பொருள் வியாபாரிகள் எனவும், இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

குருநாகல் புத்தக நிலையத்தில் தீப்பரவல்!

வைகாசி 28, 2026
இலங்கை

யடியந்தோட்டை OIC கைது!

ஆனி 29, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

ஜப்பானின் நன்கொடைகளாக மேலும் 7 மெட்ரோ பஸ்கள் இலங்கை வந்தடைந்தன!

ஆடி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை – மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான 3 வது ஒருநாள் போட்டி ஆரம்பமாவதில் தாமதம்!

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube