Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்

ஆடி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ந.கலைச்செல்வன்
முல்லைத்தீவு

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன அவர்கள் இன்றைய தினம்(30) முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்ததுடன் நடைபெறும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்டார்.

இதன் ஓர் அங்கமாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களின் ஒழுங்கமைப்பிலும் பிரதி அமைச்சரின் தலைமையிலும் விசேட கலந்துரையாடல் மாவட்ட செயலக அரியாத்தை மண்டபத்தில் மு.ப 11.30 மணிக்கு நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலானது, முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வீதி அபிவிருத்திகள் தொடர்பிலும், பொதுப் போக்குவரத்து மற்றும் நகரமயமாக்கல் தொடர்பிலும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது. தொடர்ந்து எதிர்காலத்தில் மாவட்டத்தின் வீதி அபிவிருத்தி தேவைகள், போக்குவரத்து தேவைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.ஜெயக்காந்(காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பொறியியலாளர்கள், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர், போக்குவரத்து அதிகார சபையின் உத்தியோகத்தர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், அரச பேருந்து மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐ.நா. எச்சரிக்கை!

ஆனி 30, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

பஹ்ரைனில் முதலமைச்சர் விஜய்யின் 52 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

ஆனி 24, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஸ்பெயினில் கொடூர காட்டுத்தீ: அவசரநிலை பிரகடனம்!

ஆடி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயர்தர கடல்சார் உற்பத்திகளை ரஷ்யாவுக்கு அனுப்ப யோசனை – இராமலிங்கம் சந்திரசேகர்

புரட்டாதி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube