அம்பாறை தமண பொலிஸ் பிரிவின் மகாநாகபுர பகுதியில், தொல்பொருட்களைத் தேடி வீட்டிற்குள் சட்டவிரோதமாக அகழ்வுப் பணியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் ஜூலை 30 மாலை தமண பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, அகழ்வுப் பணிக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 35 மற்றும் 45 வயதுடைய மகாநாகபுர மற்றும் வடிநாகல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தமண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
