யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் இருந்து சுமார் 16 கிலோகிராம் கேரள கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 20 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து வல்லிபுரம் கடற்கரை ஊடாக கடந்த வாரம் 250 கிலோகிராம் கேரள கஞ்சா யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வடமராட்சி பகுதியில் பொலிஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இதன்போது, நெல்லியடி பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதியை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கடத்தப்பட்ட 250 கிலோகிராம் கஞ்சா சிறு பொதிகளாகப் பிரித்து யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுவதாக சந்தேகிக்கப்படுவதால், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
