Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

3,811 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை அரசுடமையாக்க அவதானம்!

ஆடி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2024 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 3,811 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை அரசாங்கத்திற்குப் பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயல்பாட்டின் கீழ் இலங்கை பொலிஸாரின் பங்களிப்பு குறித்த அண்மைக்கால தகவல்களை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (31) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்படி, 2024 ஆம் ஆண்டில் 1,490 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில் 1,549 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை அரசாங்கத்திற்குப் பொறுப்பேற்பதற்கான சட்ட நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் வெளிப்படுத்தினார்.

மேலும், 2026 ஆம் ஆண்டின் இதுவரையிலான கடந்த சில மாத காலப்பகுதியில் 772 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை அரசாங்கத்திற்குப் பொறுப்பேற்பதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயல்பாட்டின் கீழ் போதைப்பொருள் தொடர்பில் 239,384 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 995 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட சந்தேகநபர்களில் 378 பேரின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 3,287 பேருக்கு எதிராகத் தடுப்புக் காவல் உத்தரவுகளும் பெறப்பட்டுள்ளன.

இதேவேளை, “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயல்பாடு அமுல்படுத்தப்பட்ட கடந்த ஒன்பது மாதங்களில் 2,253 கிலோ 834 கிராம் ஹெரோயின், 2,640 கிலோ 695 கிராம் ஐஸ் மற்றும் 293 கிலோ 732 கிராம் கொக்கைன் ஆகிய போதைப்பொருட்கள் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த போதைப்பொருட்களின் பெறுமதி 102,116 மில்லியன் ரூபாய் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆறு கட்சிகளின் கூட்டை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் இலவச அமரர் ஊர்தி சேவை

புரட்டாதி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவின் ஊழல் வழக்கு ஜூலை 9!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாதுக்க – மெதகேவத்த கல்கந்த பகுதியில் இயங்கிய சூதாட்ட விடுதி பொலிஸாரினால் முற்றுகை!

வைகாசி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube