Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் எப்படி பதறும் அதுபோல இந்த எதிர்கட்சியினர் பதறியடித்துக் கொண்டு திரிகின்றனர் – கந்தசாமி பிரபு

ஆவணி 1, 2026
படிக்க 4 நிமிடங்கள்

(கனகராஜா சரவணன்)

நீதிபதிகளின் வயது எல்லையை அதிகரிப்பதற்கு கூட்டுச் சேர மாட்டோம் என்றார்கள் இன்று கூட்டுச் சேர்ந்து கொண்டு மக்களை குழப்பி தங்கள் காலத்தில் இருந்த குற்ற செயல்களில் இருந்து, தப்பிக் கொள்வதற்காக சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் எப்படி பதறும் அதுபோல இந்த எதிர்கட்சியினர் பதறியடித்துக் கொண்டு திரிகின்றனர். எனவே என்ன குழப்பம் செய்தாலும், நீதித்துறை சரியான முறையில் கட்டமைக்க வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிலையாக நிற்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (31) அபிவிருத்தி குழு தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்து நெத்தி தலைமையில் பழைய கச்சேரி மண்டபத்தில் நடைபெற்றது இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு வரவு செலவு திட்டத்தின் ஊடாக 10 ஆயிரத்து 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட பெறுமதியான வேலைத்திட்டம் தொடர்பான விடயங்கள் கலந்தாலோசிக்க பட்டிருந்தது. அது தொடர்ச்சியான மாவட்டத்தின் அபிவிருத்திக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அதேபோன்று கடந்த மாதம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மயிலத்தமடு மாதவனை காணி தொடர்பாக அவர்கள் எதிர்பார்க்கின்ற 3 ஆயிரம் ஏக்கர் காணியை விடுவிப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதுடன் அந்த காணிகளை விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளும்.

அதேபோன்று மழை வெள்ளம் ஏற்படும் போக்குவரத்து தடை ஏற்படும் கிரான் பொண்டுகள்சேனை பாலங்களை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் நடவடிக்கை எடுக்கப்படும்.

வாவிகள் நிறைந்த மாவட்டம் படுவான் கரைக்கும், எழுவான் கரைக்கும் இடையிலான மண்டூர் பாலம், பழுகாமம் மற்றும் வெல்லாவெளிக்கான பாலம் மற்றும் வீதிகள் அமைக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு அதற்கான ஆய்வு அறிக்கைகளையும் தேவையான நிதி தொடர்பான அறிக்கைகளையும் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மற்றும் யானை மனித மோதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. அதனை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள யானை வேலி தொடர்பாகவும் குடிநீர் தொடர்பான பிரச்சனை தீர்ப்பதற்கு கோறளைப்பற்று பிரதேசத்தில் வாழைச்சேனை கடதாசி ஆலையில் இருக்கும் தண்ணீர் தாங்கியை அபிவிருத்தி செய்வது தொடர்பாக அதற்கு கோரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை வாகனேரி குளத்தின் நீரின் கொள்ளளவை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் வெல்லாவெளியில் உள்ள கிந்துரு குளத்தில் இருந்து நீரை பெற்றுக் கொண்டு வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள நீர் பிரச்சனையை பூர்த்தி செய்வது தொடர்பான ஏற்பாடுகள் முன்னெடுத்து வருகின்றோம்.

ஆகவே மாவட்டத்தில் எதிர்காலத்தில் ஏற்படுகின்ற குடிநீர் தட்டுப்பாட்டுக்கு ஆரம்பகட்ட திட்டங்களை ஒருங்கமைத்துள்ளோம். அதேபோன்று ஜனாதிபதியின் ஊடான கலந்துரையாடலில் குடிநீர் பிரச்சனைகளை முன்னெடுத்து வருகிறோம்.

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வயதெல்லைகள் அதிகரிப்பு தொடர்பாக பேசும் பொருளாக இருந்து வருகின்றது. கடந்த காலங்களில் உயர் நீதிபதிகளின் வயதெல்லை தொடர்பாகவும், அதனை தாண்டி கடந்த காலங்களில் இருக்கின்ற உயர் நீதிபதிகள் தொடர்பில் கடந்த ஆட்சியாளர்கள் எதிர்மறையான சிந்தனையில் இருந்து வருகின்றனர்.

இப்போது இருக்கின்ற எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கொண்டு இந்த வயதெல்லை அதிகரிப்பதில் மாறுபாடான கருத்துக்களை உருவாக்கி கொண்டிருக்கின்றனர். உதாரணமாக சாரை பாம்புக்கு மண்ணெண்னை ஊற்றினால் எப்படி பதறுமோ அதுபோலபதறியடித்துக் கொண்டு திரிவதை பார்க கூடியதாக இருக்கின்றது.

கூட்டுச் சேர மாட்டோம் என்றவர்கள், இன்று கூட்டுச் சேர்ந்து கொண்டு, இந்த வயதெல்லை அதிகரிப்பதை எதிர்க்கின்ற நிலை உருவாகியுள்ளது. இதில் இந்த சங்கத்தினர் இணைந்துள்ளனர். இவர்களின் நோக்கம் மக்களை குழப்பி தங்கள் காலத்தில் இருந்த குற்ற செயல்களில் இருந்து தங்களை விடுவித்து கொண்டு தப்பிக் கொள்வதற்கான முயற்சியை மேற்கொள்கின்றனர்.

ஒரு நீதி விசாரணை மேற்கொள்வதாக இருந்தால் நீண்ட காலம் எடுக்கும். விசாரணை இறுதி கட்டம் அடையும் போது இந்த நீதிபதியை மாற்றி இன்னும் ஒரு நீதிபதியை நியமிப்பதன் ஊடாக, அந்த விசாரணை மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலமை இருக்கின்றது.

அதனால் காலம் வீணடிக்கப்படும். தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விசாரணைகள் கூட தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. அந்த விசாரணைகளுக்கு கூட காலதாமதம் ஏற்படும். எனவே இலங்கையில் நீதி துறையை சரியான கட்டமைப்புக்குள் கொண்டுவர வேண்டும் என்பதில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முனைப்புடன் இருக்கிறது. நிலுவையில் உள்ள விசாரணைகளை துரிதப்படுத்தி அவர்களை நீதி கட்டமைப்புக்குள் கொண்டுவந்து, அவர்களுக்கான தீர்ப்பு ஒன்றை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே இருக்கின்றோம்.

இது தொடர்பாக இவர்கள் என்ன குழப்ப நிலை செய்திருந்தாலும் இறுதியில் மக்கள் நலன் சார்ந்ததாக நீதித்துறை சரியான முறையில் கட்டமைக்க வேண்டும் என்பதிலே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிலையாக நிற்கின்றது என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர் கைது!

வைகாசி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருள் விலையை அதிகரித்தது லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் நிறுவனங்கள்!

வைகாசி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக 7 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது!

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கொரியரில் போதைமாத்திரைகளை விற்பனை செய்த இளைஞர்!

வைகாசி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube