மிரிஸ்ஸவில் நேற்று (31) நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்..
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்களால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் ரிவால்வர் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.மேலும் சம்பவம் தொடர்பில் மிரிஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
