நேற்று ஜூன் மாதம் முதலாம் திகதியுடன் குவைத்தின் விமான நிலையத்தின் முனையம்- 1 அதிகாலை முதல் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளது.
கடந்த பிப்ரவரி-28 ஆம் திகதி ஈரான் குவைத் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக குவைத் விமான நிலையம் மூடபட்டது.
மேலும் தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட ரேடார் அமைப்புகள், விமான நிலையத்தின் சில பகுதிகள் சரி செய்யபட்டு சர்வதேச விமான நிலைய இயக்க அமைப்பின் அனுமதி கிடைத்த நிலையில், கடந்த ஏப்ரல்-26 முதல் முனையம்-4 மற்றும் முனையம்-5 திறக்கப்பட்டு குறிபிட்ட சில நாடுகளின் முக்கிய நகரங்களுக்கு ஜசீரா ஏர்வேஸ் மற்றும் குவைத் எயர்வேஸ் விமானங்களின் சேவைகள் ஆரம்பித்திருந்தன.
இந்த நிலையில், நேற்று (ஜூன்-1) முதல் முனையம்-1 திறக்கப்பட்டு மற்ற சர்வதேச விமானங்களின் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனால் பயணச்சீட்டு கட்டணங்கள் படிப்படியாக குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
