Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பரிசுப்பொதியில் வந்த போதைப்பொருள் – 10 கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்பு

ஆவணி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து வான்வழிச் சரக்கு மூலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட பரிசுப் பொதி ஒன்றிலிருந்து, உலோகக் கொள்கலன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புடைய கஞ்சா வகை போதைப்பொருட்களைப் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி வந்தடைந்த UL405 என்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இச்சரக்குத் தொகுதி நாட்டுக்கு வந்துள்ளது.

உத்தியோகபூர்வ ஆவணங்களில் இச்சரக்கானது ஒரு பரிசுப் பொதி எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாக சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வந்தடைந்த சரக்குத் தொகுதியானது ஜூலை 31 சுங்க அதிகாரிகளால் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது, உலோகக் கொள்கலன்களுக்குள் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு மிக நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

சுங்க அதிகாரிகளின் மதிப்பீட்டின்படி, பொதியிடல் உறைகள் உட்பட மொத்தம் 10.608 கிலோகிராம் எடையுடைய கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ஆபத்தான போதைப்பொருட்கள் அடங்கியுள்ளதாகவும் சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களின் மொத்தச் சந்தைப் பெறுமதி சுமார் 10.6 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பில் தெமட்டகொட சமிந்தவிடம் வாக்குமூலம்!

வைகாசி 5, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

தாற்காலிககமாக சீனி ஏற்றுமதியை நிறுத்திய இந்தியா!

வைகாசி 19, 2026
இலங்கைஎங்கள் ஊர்

மன்னாரில் வெளிநாட்டு உயர்கல்வி வழிகாட்டல் மையம் வைபவரீதியாக ஆரம்பம்!

ஆனி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொசொன் தின மத நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி பங்கேற்பு!

ஆனி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube