வவுனியா வடக்கு நெடுங்கேணி கல்வி வலையத்துக்கு உட்பட்ட மருதோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மாணவர்களின் நலன் கருதி 12 மில்லியன் ரூபா செலவில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் 40 அடி நீளத்தில் வடமாகாண நிதியிலிருந்து கட்டுமான பணிகள் புனரமைக்கப்பட்டு பைவகரீதியாக கூட்டுறவு பிரதி அமைச்சர் உப்பாலி சமரசிங்க அவர்களினால் வைபகரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் முதல்வர் து.சதீஷ்குமார் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம் பெற்றுள்ளது. இதன் போது பிரதம விருந்தினர்களாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் அவர்களும் வடமாக கல்வி பண்பாட்டு விளையாட்டு துறை அமைச்சர் செயலாளர் திரு.பறரிக் நிரஞ்சன் அவர்களும் வடமாகன கல்விப் பணிப்பாளர் அவர்களும் வவுனியா வடக்கு வலைய கல்வி பணிப்பாளர் அவர்களும் தேசிய மக்கள் சக்திவவுனியா வடக்கு பிரதேச உறுப்பினர் அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
ந. கலைச்செல்வன்
முல்லைத்தீவு

